சுரேஷ் கண்ணன் தொடர்ந்து உலகத் திரைப்படங்களைப் பற்றி உரையாடிவருபவர். அவர் குமுதத்தில் எழுதிய உலகத் திரைப்படங்கள். பற்றிய அறிமுகக் கட்டுரைகளின் இரண்டாவது தொகுப்பு இது. உலகம் முழுக்க வெளியாகும் முக்கியமான திரைப்படங்களை, அதன் மையச்சரடை மட்டும் சொல்லி, எளிமையாக அறிமுகப்படுத்துகிறார் நூலாசிரியர். இந்தக்கட்டுரைகளின் நோக்கம், உலகத்திரைப்படங்களை அறிமுகப்படுத்துவது மட்டுமே. இத்திரைப்பட அறிமுகங்கள் வெளியானபோது அவை பரவலான கவனத்தைப் பெற்றன. இந்த நூலின் முதல் பாகம் வாசகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்த இரண்டாம் பாகம் வெளியாகிறது. உலகத் திரைப்படங்களில் எந்தத் திரைப்படங்களைப் பார்ப்பது, சமீபத்தைய உலகத் திரைப்படங்கள் எவை என்று தெரிந்துகொள்ள உதவும் எளிமையான கையேடு இந்தப் புத்தகம்
No product review yet. Be the first to review this product.